உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச சைக்கிள் வழங்கும் விழா

இலவச சைக்கிள் வழங்கும் விழா

அவலுார்பேட்டை : வளத்தி அடுத்த தேவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் கண்மணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அண்ணாமலை வரவேற்றார். அமைச்சர் மஸ்தான், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், கவுன்சிலர் நெடுஞ்செழியன், துணைச் சேர்மன் விஜயலட்சுமி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் சிவசுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஊராட்சி தலைவர் சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை