உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிரான்ஸ் ஆசாமி சடலம் மீட்பு

 பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிரான்ஸ் ஆசாமி சடலம் மீட்பு

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே பூட்டிய வீட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், 52; கடந்த 7 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த 16ம் தேதியில் இருந்து வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். அவரது மனைவி அச்லா என்பவர், இமாச்சல் பிரதேசத்தில் உள்ளார். தனது கணவரை, இவர், கடந்த 4 நாட்களாக மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றும் எடுக்காததால் சந்தேகம் அடைந்து, வாடகை வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின், வீட்டு உரிமையாளர் சுரேஷ், கோட்டக்குப்பம் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, உள்புறம் தாழ்ப்பாள் போட்டு, அலெக்சாண்டர், படுக்கையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், இறந்தவர் கடந்த ஓராண்டாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை