உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நகராட்சி மைதானத்தில் குப்பை கொட்டும் அவலம்

 நகராட்சி மைதானத்தில் குப்பை கொட்டும் அவலம்

வி ழுப்புரம் நகராட்சி மைதானத்தில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில், நகராட்சி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் அரசு இசைப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மற்றும் அருகில் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நகராட் சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பள்ளி மைதானத்தில் கொட்டி வருகின்றனர். இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள், மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி மைதானத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அங்குள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி