விக்கிரவாண்டி: புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டில் அரவிந்த் சரவணா செராமிக்ஸில் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டு அடுத்த எல்.ஆர். பாளையம் மெயின் ரோட்டில் அரவிந்த் சரவணா செராமிக்ஸ் ேஷாரூமில் டைல்ஸ் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசுகூப்பன்கள் வழங்கப்பட்டது. நேற்று நடந்த குலுக்கலில் முதல் பரிசாக'ஏசி'ஒருவருக்கும், 2ம் பரிசாக வாஷிங் மெஷின் இருவருக்கும், 3ம் பரிசாக பிரிட்ஜ் மூன்று நபர்களுக்கும், 4ம் பரிசாக டேபிள் டாப் கிரைண்டர் ஐந்து நபர்களுக்கும், 5ம் பரிசாக டேபிள்ஃபேன் ஏழு நபர்களுக்கும்வழங்கப்பட்டது.பரிசளிப்பு விழாவிற்கு அரவிந்த் செராமிக்ஸ் இண்டஸ்ரியஸ் பி.லிட் மேலாண் இயக்குனர் குமார் தலைமை தாங்கினார். அரவிந்த் செராமிக்ஸ் பி.லிட் இயக்குனர்கள் அரவிந்த் பாபு, அனுஜ்பாபு முன்னிலை வகித்தனர். அரவிந்த் சரவணா செராமிக்ஸ் விற்பனையாளர் யோகானந்த் சரவணன் வரவேற்றார்.புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கலில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.விழாவில் மண்டல மேலாளர் கேசவன், மேலாளர்கள் மாரி, ரகு, விழுப்புரம் மாவட்ட டைல்ஸ் தொழிலாளர் சங்க தலைவர் தனுசு, செயலாளர் சாரங்கன், துணை செயலாளர் வேலு, மதகடிப்பட்டு ஜெயகணேஷ், பா.ம.க., வடக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி,விக்கிரவாண்டி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பன்னீர், ஜெ., பேரவை செயலாளர் சரவணக்குமார், முகையூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன்,மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம், விழுப்புரம் தொழிலதிபர் லாலா ராதாகிருஷ்ணன், ஓம்சக்தி பைனான்ஸ் ஏழுமலை, சுந்தர், வாடிக்கையாளர்கள், டைல்ஸ் லேயர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விற்பனையாளர் சரவணன், புவனேஸ்வரி, அன்பரசி நன்றி தெரிவித்தனர்.