மேலும் செய்திகள்
மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்
09-Aug-2025
மரக்காணம்: மரக்காணம் அருகே கொழுக்கட்டை செய்து தராத விரக்தியில், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், சக்தி நகரை சேர்ந்தவர் முனுசாமி மகள் மோகனபிரியா, 14; இவர், அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், தாய் விஜயலட்சுமியிடம் கொழுக்கட்டை செய்து தர கூறியுள்ளார். விஜயலட்சுமி, நாளை மறுநாள் செய்து தருவதாக தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மனமுடைந்த மோகனபிரியா, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரக்காணம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Aug-2025