மேலும் செய்திகள்
இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை
11-Sep-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டதாரி பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகள் சிவரஞ்சனி, 23; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், கடந்த 12ம் தேதி, விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக, கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Sep-2024