உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்பு கூட்டம்; 394 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்; 394 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 394 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள், உடனடியாக கவனம் செலுத்தி குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா கோருதல், பட்டா மாறுதல் உட்பட பல கோரிக்கைகள் கொண்ட 394 மனுக்கள் பெறப்பட்டது. தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ