உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணம்

விழுப்புரம் : அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் நிகழ்ச்சி நடந்தது.பள்ளிக்கல்வி துறை சார்பில், பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்ட கல்லுாரிகளுக்கு களப்பயணமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டத்தில், 6,822 பள்ளி மாணவ, மாணவிகள் கல்லுாரிகளில் உயர்கல்வி சார்ந்த தங்களின் சந்தேகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு நாள் களப்பயணம் சென்றனர். இதில், விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ