உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து திருட்டு: போலீஸ் விசாரணை

வீடு புகுந்து திருட்டு: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் ஜான்பெனிடோ, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றிருந்தார். மாலை வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது லேப்டாப் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் திருடு போயிருந்தன. ஜான்பெனிடா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், கைரேகை, தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ