மேலும் செய்திகள்
ஒதியத்துார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
5 minutes ago
ஒருகோடி சாலை கந்தல் : வாகன ஓட்டிகள் அவதி
5 minutes ago
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி
6 minutes ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரளூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் வெங்கடாஜலபதி, 29: பி,இ., பட்டதாரியான இவர், எரளூர் ஊராட்சி தலைவர்.இவர், கூறியதாவது: குயவர் தெருவில் உள்ள நீண்ட கால குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இருளில் இருந்த ஏனாதிமங்கலம் - ஏரளூர் சாலையில் புதியதாக 30 மினகம்பங்கள் அமைத்து தெருவிளக்குள் அமைக்கப்பட்டுள்ளது.எரளூர் - ஏனாதிமங்கலம் சாலையில் மனி பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணி நடைபெற்று வருகிறது. எரளூர் பகுதியில் இளைஞர்களுக்கு புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பணி நடைபெற்று வருகிறது.தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில் 90 சதவீத பணிகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள வாக்குறுதி வருங்காலங்களில் செய்து முடிக்கப்படும்' என, தெரிவித்தார்.
5 minutes ago
5 minutes ago
6 minutes ago