விழுப்புரத்தில் சாலைப்பணி நகரமன்ற தலைவர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் போடப்பட்டு வரும் தார் சாலை பணியை நகர மன்ற தலைவர், கமிஷனர் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய பகுதிகளில், தற்போது புதிதாக சிமென்ட் மற்றும் தார் சாலைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராகவன்பேட்டையில் நடைபெறும் பணிகளை நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் வீரமுத்துகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, சாலை பணியை தரமுடனும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினர். பணி மேற்பார்வையாளர் ஹரிஹரன், கவுன்சிலர் இளந்திரையன் உடனிருந்தனர்.