உள்ளூர் செய்திகள்

 ஜோதி தரிசனம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி திரை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் சத்சங்கம் சார்பில் நேற்று காலை 11:00 மணியளவில் திரு அருட்பா அகவல் பாராயணம் நடந்தது. தொடர்ந்து கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி 12 மணியளவில் திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்ற வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் வசந்தராயன், கார்த்திகேயன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி