உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா

திண்டிவனம் : திண்டிவனம் சந்தைமேடு புனித பிரான்சிஸ் டி அசிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.விழாவில் பள்ளி முதல்வர் பாக்கியநாதன், காமராஜர் குறித்த சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடந்து காமராஜரின் மேன்மையான கருத்துகள் குறித்த பள்ளி மாணவர்களின் நாடகம், பேச்சு, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவையொட்டி, கடந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வகுப்பில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டினர். பள்ளி தாளாளர் பிரகாசம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை