| ADDED : நவ 18, 2025 07:02 AM
விழுப்புரம்: விழுப்புரம் தி நியூ ஜான் டூயி பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில், 4 புதிய கற்றல் வகைகளில் முதலில் நுாலகம் முறையில் புத்தகங்களை படித்தல், வாசித்தல் பற்றி தொழில்நுட்ப முறையில் கற்றுத்தரப்பட்டது. உடற்பயிற்சி வகுப்பறை மாணவர்களுக்கு ஆரோக்கியம், கல்வியும், இதில், கம்பி ஏறுதல் , சறுக்கு விளையாட்டு, புதிய விளையாட்டு சாதனங்கள் பற்றி கூறப்பட்டது. செயல்முறை கற்றல் வகுப்பில் யோகா, தியானம் கற்பிக்கப்பட்டது.தொட ர்ந்து அறிவியல் புதுமை கண் காட்சி நடந்தது. பின், நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குநர் எமர்சன் ராபின், கல்வி அதிகாரி சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் யோகந்தர்சிங், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ரவிச்சந்திரன், வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா ஆகியோர் மாணவர்களை பாராட்டி, பரிசு, சான்றிதழ் வழங்கினர்.