மேலும் செய்திகள்
திருவேகம்புத்துாரில் முதியவர் கொலை
30-Aug-2025
விழுப்புரம்: செஞ்சி அருகே சாராயம் காய்ச்சியவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா சோ.குப்பம் ஊராட்சியில், கடந்த ஆக.,19ம் தேதி மாலை, அங்குள்ள நந்தன் கால்வாய் அருகே உள்ள ஆண்டிமலை குன்றில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் 'திடீர்' ரெய்டு மேற்கொண்டனர். அப்போது அங்கு, அதே பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி வனத்தியான் மகன் பன்னீர்செல்வம்,54; தலைமையில் சாராயம் காய்ச்சிய கும்பலை பிடித்தனர். அங்கிருந்த 20 லிட்டர் ஊரல்களும், சாராயம் மற்றும் வெள்ளம் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து, பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இந்நிலையில், அவரது தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்த, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, சத்தியமங்கலம் போலீசார், தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பன்னீர்செல்வத்தை கைது செய்து, நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
30-Aug-2025