உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரயில் நிலையத்தில் கஞ்சா விற்றவர் கைது

 ரயில் நிலையத்தில் கஞ்சா விற்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ரயில் நிலையம் சுற்று பகுதியில், டவுன் போலீசார் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையம் அருகே கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாஷா மகன் காதர்உசேன்,24; என்பது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, காதர் உசேனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை