உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

வானுார் : பைக்கில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் போலீசார் நேற்று பேராவூர் ஏரிக்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது கிளியனுார் மார்க்கத்தில் இருந்து பேராவூர் நோக்கி பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், 18 சாராய பாக்கெட்டுக்கள், 10 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில், ஆகாசம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 40; என்பதும், புதுச்சேரி சேதாப்பட்டு பகுதியில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தமிழகப்பகுதியில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம் மற்றும் மதுபாட்டில்கள், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி