உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

 பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில், நேற்று காலை பனையபுரம் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த சேலம் மாவட்டம், அம்மணிகொள்ளம்பட்டி, அரசமரத்து காரட்டூரை சேர்ந்த ராஜா மகன் சந்தோஷ்குமார், 33; என்பவரை கைது செய்து, 165 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !