உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மேலாண் இயக்குநர் ஆய்வு

 மேலாண் இயக்குநர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வணிக வளாகம் கட்டுமான பணியை மேலாண் இயக்குநர் ஆய்வுசெய்தார். விழுப்புரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுறவு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாநில நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களின் இணைய கூடுதல் பதிவாளர், மேலாண் இயக்குநர் பிருந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, சரக துணைப்பதிவாளர் (பொறுப்பு) ராகினி, சங்க செயலாட்சியர் அருண்பிரசாத் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை