உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை

 ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடந்தது. அதனையொட்டி, ஐயப்ப சுவாமிக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு ஐயப்பதாசன் குழுவினரின் பக்தி பாடல்களும், 11:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12:30 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வேலவன், செயல் அலுவலர் வேலரசு செய்தனர். கோவிலில் வரும் 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு வீரவாழி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், நள்ளிரவு 12:01 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பொதுமக்களுக்கு புத்தாண்டை யொட்டி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை