உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் அனந்தபுரத்தில் திறப்பு விழா

மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் அனந்தபுரத்தில் திறப்பு விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த அனந்தபுரத்தில் புதிதாக மஞ்சுளா டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர்கள் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன், மஞ்சுளா தலைமை தாங்கினர். சங்கமித்ரா, சாய்ஹர்ஷன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அரசு வழக்கறிஞர் சிவா புதிய ஷோரூமை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.டி.வி.எஸ்., மோட்டார்ஸ் விற்பனை பிரிவு ஏரியா சர்வீஸ் மேலாளர் அருள்மணி செல்வன் பணிமனை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை பிரிவை திறந்து வைத்தார். டி.வி.எஸ்., மோட்டார்ஸ் விற்பனை பிரிவு பகுதி மேலாளர் சந்தோஷ் ஜேம்ஸ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அனந்தபுரம் குளோபல் மருத்துவமனை இயக்குனர் கார்த்திகேயன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அனந்தபுரம் அ.தி.மு.க., நகர செயலாளர் சங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை