உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மார்க்கெட் கமிட்டி எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 மார்க்கெட் கமிட்டி எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தினர், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கன்னியப்பன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். மாநில இணைச் செயலாளர் பாக்கியநாதன், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, அண்ணாதுரை, பொருளாளர் கண்ணன், மாவட்ட தலைவர்கள் சேகர், கேசவன், வெங்கடேசன், சிவா, பாண்டுரங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், விற்பனைக் கூட எடைபணி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, இயற்கை மரண இழப்பீடு, வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியளிக்க வேண்டும். வேளாண்துறை விற்பனை துறை காலி பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை