உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாட்டு வண்டி ஓட்டிய அமைச்சர் மஸ்தான்

மாட்டு வண்டி ஓட்டிய அமைச்சர் மஸ்தான்

செஞ்சி : செஞ்சியில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் அமைச்சர் மஸ்தான் மாட்டு வண்டி ஓட்டினார்.செஞ்சி பீரங்கிமேடு மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை மாட்டுப்பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மந்தைவெளியில் கால்நடைகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து மஞ்சள் நீராட்டு நடத்தினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான், மாரியம்மன் கோவிலில் இருந்து மந்தவெளி வரை மாட்டு வண்டி ஓட்டி வந்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் முக்தியார் அலி மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர், மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் காசி அம்மாள் ஏழுமலை, பாலகிருஷ்ணன் வனக்குழு தலைவர் ராமு மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்