உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மகள் மாயம் தாய் புகார்

 மகள் மாயம் தாய் புகார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மகளைக் காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள் ளார். கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகள் கல்பனா, 23; இவர் சென்னை ஒரகடத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 16 ஆம் தேதி வேலைக்குச் சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் சக்தி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி