மேலும் செய்திகள்
பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு
31-Aug-2025
விழுப்புரம் : தேசிய சட்ட சேவைகள் தின கண்காட்சிக்கு புகைப்படம் மற்றும் ஓவியம், வீடியோக்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி செய்திக்குறிப்பு: தேசிய சட்ட சேவைகள் 30 ம் ஆண்டை முன்னிட்டு புகைப்படம் மற்றும் கலை கண்காட்சி, 'அனைவருக்கும் சமமான நீதி சட்ட உதவியின் பார்வை' என்ற தலைப்பில் நடக்க உள்ளது. நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 30 ஆண்டுகால சேவையை குறிக்கும் விதமாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்கிறது. வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், தங்கள் முயற்சியில் அன்றாட போராட்டங்கள், மீள்தன்மை மற்றும் சட்ட உதவியால் செயல்படுத்தப்படும் அதிகாரம் அளித்தல் கதைகள் போன்ற புகைப்படங்கள், ஓவியங்கள், வீடியோக்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் சமர்ப்பிக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் அனைத்தும் டில்லியில் வரும் நவ., 8 மற்றும் 9 ம் தேதிகளில் நடக்கும் தேசிய சட்ட சேவைகள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும். வீடியோக்கள், புகைப்படங்கள், ஓவியங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் gmail.comஎன்ற இ மெயில் முகவரிக்கு அக்., 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், விவரங்களை https://viluppuram.dcourts.gov.in/#notification மாவட்ட நீதிமன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31-Aug-2025