| ADDED : நவ 19, 2025 06:56 AM
விழுப்புரம்: மாவட்ட மைய நுாலகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நுாலக கட்டடம் திறப்பு விழா விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதி, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட நுாலகர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மைய நுாலக அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ரவிக்குமார் எம்.பி., புதிய நுாலக கட்டடத்தை திறந்து வைத்தார். நுாலகர்கள் வேல்முருகன், ஆரோக்கியம் முன்னிலை வகித்தனர். வி.சி.., நிர்வாகிகள் இளமாறன், பெரியார், அறிவுக்கரசு, ரணியன், அகத்தியன் மற்றும் நுாலக அலுவலர்கள், மாணவர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். இரண்டு மாடிகள் கொண்ட இந்த புதிய கட்டடத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கும், பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். விழாவில், எம்.பி., உள்ளிட்ட பலர் நுாலகத்திற்கு நிதி வழங்கி புரவலர்களாக இணைந்தனர். இந்த படிப்பு மையத்திற்கு, மேஜை, நாற்காலிகள் உடனே வழங்கப்படும் என எம்.பி., உறுதியளித்தார்.