உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  காங்., வடக்கு மாவட்ட தலைவர் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

 காங்., வடக்கு மாவட்ட தலைவர் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட காங்., தலைவர் நியமனம குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேலிட பார்வையாளர் ராமசுகந்தன், மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், மாநில எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு துணை தலைவர் உதயானந்தன், வட்டார தலைவர் புவேனேஸ்வரன் நிர்வாகிகள் புலிமணி, மதன்குமார், வெங்கட், அஜிஸ், ஜெய்கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., மேலிட பொறுப்பாளரான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கட் சிறப்புரையாற்றினார். தொடந்து நிர்வாகிகளிடம், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக யாரை தலைவராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி