| ADDED : டிச 10, 2025 06:24 AM
விழுப்புரம்: விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் துவக்க விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் அப்துல்ஜபார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கி, நாட்டு நலப் பணித்திட்டம் பற்றி மாணவ, மாணவியருக்கு விளக்கினார். விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜசேகர், திட்ட அலுவலர் கோபால் முன்னிலை வகித்தனர். காணை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன், முதுகலை ஆசிரியர் குணசேகர் வாழ்த்தி பேசினர். மாவட்ட கல்வி அலுவலர் சேகர், நாட்டு நலப்பணித்திட்ட சேவையை துவக்கி வைத்து பேசினார். பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் துளசிங்கம் நன்றி கூறினார். நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 50 பேர் சமூக சேவை பணிகளை துவங்கினர்.