உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரியாணி பரிமாற தாமதம் தகராறில் ஒருவர் கைது

பிரியாணி பரிமாற தாமதம் தகராறில் ஒருவர் கைது

திண்டிவனம் : மஞ்சள் நீராட்டு விழாவில், பிரியாணி பரிமாறுவதில் தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துாரைச் சேர்ந்தவர் பாலகுரு. இவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில், சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அப்போது, பந்தியில் அமர்ந்தவர்களுக்கு பிரியாணி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திர மடைந்த அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன், 45; உணவு பரிமாறாதது குறித்து கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த வேல்முருகன், 40; பாக்கியராஜ், 39; ஆகியோர் மணிமாறனை தாக்கினர். படுகாயமடைந்த மணிமாறன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பாக்கியராஜை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி