உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தீவனுார் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

 தீவனுார் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணியளவில், பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 5:45 மணியளவில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பின், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்தது. வைகுண்ட வாசல் வழியாக காலை 6.30 மணிக்கு, ஊஞ்சலில் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ