உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரிவலத்திற்கு சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் ஏற்பாடு

கிரிவலத்திற்கு சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் ஏற்பாடு

விழுப்புரம், : பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலைக்கு இரு நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இதுகுறித்து விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை 23ம் தேதி 682 சிறப்பு பஸ்களும், 24ம் தேதி 502 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யும் வகையில் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்கவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி