உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.ம.மு.க., பொது செயலாளருக்கு திண்டிவனத்தில் கட்சியினர் வரவேற்பு

அ.ம.மு.க., பொது செயலாளருக்கு திண்டிவனத்தில் கட்சியினர் வரவேற்பு

திண்டிவனம்,: திண்டிவனத்திற்கு வந்திருந்த அ.ம.மு.க.,பொதுச்செயலாளர் தினகரனுக்கு, கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில், அ.ம.மு.க.,வின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திண்டிவனம் வழியாக வந்த கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனுக்கு, திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் எதிரில் நேற்று காலை 11 மணிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.தொடர்ந்து அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து வெள்ளை புறாக்களை பறக்கவிட்டு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சியின் துணை பொது செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் கார்த்திகேயன், கணபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து, வடக்கு மாவட்ட செயலாளர் குமரன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் கோமுகிமணியன், ராஜாமணி மற்றும் திண்டிவனம் நகர நிர்வாகிகள் முருகன், அப்துல்ரஷித், லோகேந்திரன், யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை