உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாய்க்காலை துார்வாரக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

வாய்க்காலை துார்வாரக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கண்டாச்சிபுரம்: வீரபாண்டி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியின் பாசன வாய்க்காலை துார் வாரக்கோரி, பொதுமக்கள் உண்ணவிரதம் இருந்தனர்.கண்டாச்சிபுரம் தாலுகா, வீரபாண்டி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியின் பாசன வாய்க்கால் புதர் மண்டி உள்ளது. இதனை துார்வாரிட இப்பகுதி மக்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியின் தண்ணீர் மூலம் இப்பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது தண்ணீர் வரத்திற்கான பாதைகள் அடைந்து கிடப்பதால் விவசாயம் பாதிக்கப்படுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, வாய்க்காலை துார் வார வலியுறுத்தி நேற்று காலை 10:00 மணியளவில் கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ