உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு வங்கிகளில் ரூ.4.53 கோடி மோசடி விசாரணை கோரி கலெக்டரிடம் மனு

கூட்டுறவு வங்கிகளில் ரூ.4.53 கோடி மோசடி விசாரணை கோரி கலெக்டரிடம் மனு

விழுப்புரம் : விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 58; ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரான இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் அடுத்த கண்டமானடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 1988 முதல் 2020ம் ஆண்டு வரை விற்பனையாளராக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றேன். இந்த கூட்டுறவு வங்கியில் கடந்த 2017, 2018ம் ஆண்டில் நகை ஏலம் விட்டதில் ரூ.10.35 லட்சமும், தண்ட வசூலில், 2016ம் ஆண்டில் ரூ.76.31 லட்சம் இழப்பு ஏற்பட்டது.இதே போல், நல்லாளம், ஏமப்பேர், ரெட்டணை உள்ளிட்ட பல கூட்டுறவு வங்கிகளில் ரூ.4.53 கோடி அளவில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து, வங்கி பணியாளர்கள், அலுவர்கள் மீதும் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ