உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செஞ்சி கோட்டையில் புகைப்பட கண்காட்சி

 செஞ்சி கோட்டையில் புகைப்பட கண்காட்சி

செஞ்சி: செஞ்சி கோட்டையில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு நாளை முதல் 7 நாட்களுக்கு புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. உலகம் முழுதும் நவம்பர் 19ம் தேதியை உலக பாரம்பரிய வாரத்தின் துவக்கமாக கொண்டாடி வருகின்றனர். இதை கொண்டாடும் வகையில் நாளை 19ம் தேதி காலை 11:00 மணிக்கு செஞ்சி கோட்டையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் 7 நாட்களுக்கு 'செஞ்சி கோட்டை மற்றும் உலக மரபுச்சின்னங்கள்' குறித்த புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடைபெற உள்ளது. கண்காட்சியை ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைக்கின்றனர். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கவுரவ விருந்தினராக பங்கேற்கிறார். இந்திய தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்திய தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !