| ADDED : நவ 20, 2025 06:06 AM
செஞ்சி: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு செஞ்சி கோட்டையில் 7 நாள் புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறை சார்பில், 19ம் தேதி முதல் 25 வரையில் ஏழு நாட்கள் புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது. இந்திய தொல்லியல் துறை சென்னை வட்ட முத்த நிர்வாக அலுவலர் ரகு தலைமை தாங்கினார். தொல்லியல் துறை சென்னை வட்ட கண்ணாகணிப்பாளர் சுஸ்ஹண்டாகுமார்கர் வரவேற்றார். தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர். தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், வரலாற்று ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வரலாற்றை கண்பார்வையற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கான குறிப்போடு வழங்கினர். மாணவர்களின் பேச்சு போட்டி நடந்தது. விழாவில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், அரசு பெண்கள் பள்ளி மாணவிகள், அல்ஹிலால் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பாரம்பரிய நடை ஊர்வலம் நடந்தது. செஞ்சி கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.