வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போலீஸ் என்ன யாரையும் குளிக்காதேன்னு சொல்லணுமா? ஒரு நாலு பேரை புடிச்சு அங்கேயே நாலு நாள் கட்டி வெச்சுப் பாருங்க.
மேலும் செய்திகள்
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
25-Oct-2025
விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு விடுமுறையை கொண்டாட வந்த பொதுமக்கள் அணையில் ஆபத்தை உணராமல் குளித்தனர். விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக அதன் கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29.400அடி (412. 372 மில்லியன் கன அடி) நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 380 கன அடி நீர்வரத்து வந்ததையடுத்த அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று ஒரு மதகு வழியாக 311 கன அடி நீரை அதிகாரிகள் வெளியேற்றினர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் அணையை சுற்றி பார்க்க திரண்டிருந்தனர். அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஆண்கள் பெண்கள் என திரளாக இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். அணையில் இருந்து தண்ணீர் ஊற்றும் இடம் 15 அடி ஆழம் உடையது. மேலும் தண்ணீர் அதிக அளவில் ஊற்றும் போது தண்ணீர் சுழன்று வெளியேறுகிறது. இதில் தவறி விழுந்தால் மூச்சு திணறி உயிரிழிப்பு ஏற்படும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருபுறம் பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த வண்ணம் இருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் அணையில் குளிக்கின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டுகொள்ளாததால் நேற்று அணை பகுதியில் குளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆபத்தை உணராமல் குளித்த மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் போலீசார் இனி வரும் நாட்களில் அணையில் பொதுமக்கள் இறங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் என்ன யாரையும் குளிக்காதேன்னு சொல்லணுமா? ஒரு நாலு பேரை புடிச்சு அங்கேயே நாலு நாள் கட்டி வெச்சுப் பாருங்க.
25-Oct-2025