உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மேல்மலையனுாரில் தவறவிட்ட நகை உரியவரிடம் போலீசார் ஒப்படைப்பு

 மேல்மலையனுாரில் தவறவிட்ட நகை உரியவரிடம் போலீசார் ஒப்படைப்பு

விழுப்புரம்: மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவத்தின் தவறவிடப்பட்ட 8 சவரன் தங்க நகையை போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கார்த்திகை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில், செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் போலீசார், பக்தர்களுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இங்கு பாதுகாப்பு பணிகளில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணியை சேர்ந்த காவலர்கள் சதீஷ், தர்மதுரை ஆகியோரிடம் பக்தர்கள் தவறவிட்ட 8 சவரன் நகை கிடைத்தது. இந்த நகையை மேல்மலையனுார் இன்ஸ்பெக்டர் வினிதாவிடம் ஒப்படைத்தனர். போலீசார் மீட்ட நகை குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகையை தவறவிட்டது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பக்கிரபாளையம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மனைவி சகிலா, 50; என தெரியவந்தது. வீட்டில் நகையை வைத்து விட்டு வந்தால் பாதுகாப்பு இல்லை என கருதி, தனது பையில் நகையை கோவிலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, போலீசார் நகையை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். நகையை பெற்றவர்கள், போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நகையை மீட்டு ஒப்படைத்த காவலர்கள் சதிஷ், தர்மதுரை ஆகியோரை எஸ்.பி., சரணவன் வாழ்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ