உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

 பஸ் பயணியிடம் நகை திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பஸ்சில் பெண் பயணியிடம் 6 சவரன் செயினை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், 44; இவரது தாய் நாகா, தந்தை ராமலிங்கம் ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் சென்றனர். முண்டியம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது, நாகா அணிந்திருந்த 6 சவரன் செயினை காணவில்லை. இதுகுறித்து பாலன் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை