உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விபரம் ரேஷன் கடையில் பட்டியல் ஒட்டியதால் பரபரப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விபரம் ரேஷன் கடையில் பட்டியல் ஒட்டியதால் பரபரப்பு

விழுப்புரம், : பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கிய நிலையில், விழுப்புரம் ரேஷன் கடையில் பயனாளிகள் பட்டியலை ஒட்டியதால் பரபரப்பு நிலவியது.பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட, விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி கடந்த 7ம் தேதி துவங்கியது. இதில், பணம், பொருட்கள் வழங்கும் நாள், நேரத்தை குறித்து ரேஷன் கடை பணியாளர்கள், கூட்டுறவு ஊழியர்கள் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்.பரிசுத் தொகுப்பு பொருட்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி எதிரே உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை ஒட்டி வைத்துள்ளனர்.இந்த பட்டியலில் டோக்கன் வழங்கப்பட்ட சிலரின் பெயர்கள் இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து குடிமைப் பொருள் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைப்படி ரேஷன் கடையில் பயனாளிகள் பட்டியல் ஒட்டக்கூடாது. டோக்கன் பெற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை