உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரவுன் சாலை விரிவாக்கப் பணிக்கு சாலையோர மரங்களை வெட்ட எதிர்ப்பு: ஆரோவில்லில் பரபரப்பு 

கிரவுன் சாலை விரிவாக்கப் பணிக்கு சாலையோர மரங்களை வெட்ட எதிர்ப்பு: ஆரோவில்லில் பரபரப்பு 

வானுார் : ஆரோவில்லில், கிரவுன் சாலை விரிவாக்க பணிக்கு சாலையோர மரங்களை வெட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில், கிரவுன் சாலைத் திட்டபணி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. இதற்காக அப்பகுதியில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஆரோவில் வாசிகளில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கிரவுன் சாலை திட்டத்திற்காக, பசுமையை அழிப்பதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்ககை விசாரித்த நீதிபதிகள், இயற்கையை அழிக்காமல் திட்டத்தை தொடர அறிவுறுத்தினர். இதையடுத்து 30 அடி அளவில் கிரவுன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நேற்று சோலார் கிச்சனில் இருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட கிரவுன் சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியம் 2:00 மணிக்கு, ஒரு தரப்பினர் திரண்டு வந்து மரங்களை வெட்டுவதை தடுத்தனர். பெண் ஒருவர், மரத்துடன் சங்கிலி போட்டு பூட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.தகவலறிந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், கிரவுன் சாலைத் திட்டம், உரிய அனுமதியோடு நடக்கிறது. இருபுறமும் இடையூறாக உள்ள மரங்களை மட்டுமே வெட்டப்படுகிறது. தேவையின்றி தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து, மரங்கள் வெட்டும் பணி நடைபெற்றது.சாலை பணிக்காக 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி சாயக்கப்பட்டதை தடுக்க முடியாததால், ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் கண்ணீர் வடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை