உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

செஞ்சி: நெகனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை சிவக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.வல்லம் ஒன்றியம், நெகனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவக்குமார் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் இந்திரா வரவேற்றார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் சித்ரா ஜெய்சங்கர் , பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் சரவணன், அரிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்