உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 341 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய அலுவலர்கள், மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் 341 மனுக்கள் பெறப்பட்டது. அதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ்வரி, சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கலால் ஆணையர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ