| ADDED : ஜன 04, 2024 03:49 AM
விழுப்புரம்: பணிநிரந்தரத்தோடு கூடிய நியமன ஆணை வழங்கக் கோரி, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.ஒன்றியத் தலைவர்கள் ஆறுமுகம், வேலாயுதம், ஜெயபாலன், பாலகிருஷ்ணன், பூபாலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.நிரந்தரத்தோடு கூடிய பணிநியமன ஆணை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்குதல், பணியிட மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.