| ADDED : ஜன 12, 2024 12:06 AM
செஞ்சி: சத்தியமங்கலத்தில் பா.ஜ., வினர் வீடு வீடாகச் சென்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிகை வழங்கினர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் பெருமாள் கோவிலில் பா.ஜ., சார்பில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பத்திரிகைக்கு சிறப்பு பூஜையும், அட்சதை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து விழா பத்திரிகையை மேளதாளங்களுடன் வீடுச் வீடாக சென்று கொடுத்தனர்.நிகழ்ச்சிக்கு ராஜா தேசிங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலைவர் பாபு வரவேற்றார்.முன்னாள் கோட்ட அமைப்பாளர் ரமேஷ், ராணுவ பிரிவு மாநில செயலாளர் வசந்த் குமார், மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், வழக்கறிஞர் பாஸ்கரய்யா, ஒன்றிய தலைவர் தங்கராமு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.