உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்

பசு மாடுகள் திருட்டு போலீசில் புகார்

செஞ்சி: செஞ்சி அருகே இரண்டு பசு மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த வேலந்தாங்கள் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 73: இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கொட்டகையில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார்.கடந்த 19ஆம் தேதி காலை 3 மணிக்கு பார்த்த போது பசு மாடுகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர். பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி