உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி ஆற்றில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

செஞ்சி ஆற்றில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்றில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. செஞ்சி, சங்கராபரணி ஆற்றில் மேல் களவாய் ரோடு சுடுகாடு, இடுகாடு பகுதியில் தொடர்ந்து கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதி தண்ணீர் கெட்டு, துர்நாற்றமும் வீசி வருகிறது. இறந்தவர் உடலை தகனம் செய்ய வரும் பொதுமக்களும், இந்த வழியாக சென்று வரும் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நேற்று முன்தினம் செஞ்சி கோட்டை நீராதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகளுடன், இடுகாட்டு பகுதியை பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி பார்வையிட்டார். உடனடியாக இறைச்சி கடை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இடுகாட்டிற்கு சுற்று சுவரும், கேட்டும் அமைத்து கண்காணிப்பதாக சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை