உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ. 60 லட்சம் மதிப்பில் பூங்கா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ரூ. 60 லட்சம் மதிப்பில் பூங்கா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

செஞ்சி: செஞ்சி பி ஏரியில் ரூ.60 லட்சம் மதிப்பில் மின் விளக்குகளுடன் கூடிய பூங்கா அமைக்க பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செஞ்சி பேரூராட்சி கூட்டம், தலைவர் மொக்தியார் அலி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கலையரசி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜலட்சுமி ஜெயல்மணி, கவுன்சிலர்கள் சந்திரா, அஞ்சலை,லட்சுமி, கார்த்திக், சீனிவாசன், சங்கர், ஜான் பாஷா, பொன்னம்பலம், அகல்யா, நூர்ஜகான், சிவக்குமார், மோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பேரூராட்சியின் வரவு, செலவுகளுக்கு ஒப்புதல் வழங்கியும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.93 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள பி. ஏரியில் பொது நிதியில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் மின்விளக்குகளுடன் கூடிய பூங்கா அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.1.29 கோடி மதிப்பில் கொத்தமங்கலம் குறுக்கு தெருவில் சிறுபாலம், வ.உ.சி., 3 வது தெருவில் வடிகால் வாய்க்கால் சிமெண்ட் சாலை, ரங்கசாமி தெரு, சையத் உசேன் தெரு, எல்.டி பேங்க் தெரு, குடுசாயபு தெருவில் சிறுபாலம் மற்றும் வடிகாலுடன் சிமெண்ட் சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றினர். இதில் பேரூராட்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !