உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்

பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்

செஞ்சி : செஞ்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இருந்த மரத்தை யாரோ வெட்டி எடுத்து சென்றதால் வருவாய் ஆய்வாளர் மீது வி.ஏ.ஓ., போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சி சக்கராபுரம் குளக்கரை எதிரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு இருந்த பூவரச மரத்தை நேற்று காலை யாரோ வெட்டி எடுத்து சென்றிருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தில் ஆர்.ஐ., ஆக பணிபுரிந்து வரும் ஜெய்கணேஷ் 45, மீது, அதே பகுதி வி.ஏ.ஓ., ராஜேஷ் 38, செஞ்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை