உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி இறுதி கட்டம்

திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி இறுதி கட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலைப் பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில், நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான 178 கி.மீ., துாரத்திற்கு நகாய் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) சார்பில், 610 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது.இதில், திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் சந்தைமேடு, அய்யந்தோப்பு வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையிலான 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இப்பணி முற்றிலும் முடிவடைந்த நிலையில், சந்தைமேடு அருகே, அய்யந்தோப்பு பகுதியில், அரசு கல்லுாரி செல்லும் சாலைப் பகுதியில் 200 மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்கப்படாமல், நீண்ட நாட்களாக மண் சாலையாக இருந்தது.இந்த சாலை, பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், கல்லுாரி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுத்து, சாலைப் பணியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதுதொடர்பாக தாசில்தார் சிவா தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில், சுரங்கப்பாதைக்கு பதிலாக கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்க பொது மக்கள் சம்மதித்தனர். அதனையொட்டி, கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த புறவழிச்சாலை, முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுவதற்கு முன்னரே, அனைத்து வாகனங்களும் செல்கின்றன.தற்போது புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானா பகுதியில் இரவு நேரத்தில் விபத்தை தவிர்க்க விரைவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.அதேபோல் சந்தைமேடு ரவுண்டானாவில் உள்ளது போல், கல்லுாரி சாலை ரவுண்டனாவில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும்.இதுகுறித்து நகாய் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தற்போது ரவுண்டானா அமைக்கும் பணி முடிந்துள்ள நிலையில் ஒரு வாரத்தில் ைஹமாஸ் விளக்கு மற்றும் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்படும். அனைத்து பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து, மார்ச் மாதம் புறவழிச்சாலை முறைப்படி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும்' என்றனர்.

3 புறவழிச் சாலைகள்

திண்டிவனத்தில், திண்டிவனம் - சென்னை சாலையில் சலவாதி கூட்ரோடு வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் ஒரு புறவழிச்சாலை உள்ளது. இதேபோல் திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் அருகே நகராட்சி மின்தகன மையம் வழியாக தீர்த்தக்குளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தை கடந்த செல்லும் ஒரு புறவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது.தற்போது மூன்றாவதாக திண்டிவனம் சந்தைமேட்டிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை கல்லுாரி சாலையில் உள்ள புறவழிச்சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ